ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்றாடுக்கு பாதுகாப்பு - போலீஸ்

திருவள்ளூர்: நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் துவங்க இருப்பதால். வாக்கு இயந்திரங்களை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய மூன்றடுக்கு பாதுகாப்பு போடபட்டுள்ளது.

மூன்றாடுக்கு பாதுகாப்பு
author img

By

Published : Apr 20, 2019, 7:37 AM IST

திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பூந்தமல்லி தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குபதிவு இயந்திரங்களை தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மாதவரம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குபதிவு இயந்திரங்களை தொகுதிவாரியாக தனித்தனி அறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான மகேஸ்வரி ரவிக்குமார் பார்வையிட்டார். பின்னர் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த தனித்தனி அறைகளை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

மே மாதம் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை துவங்கவுள்ள நிலையில் ஒவ்வொரு அறையின் முன் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

மேலும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்திற்கு பகலிலும், இரவிலும் கண்காணிக்க துப்பாக்கி ஏந்திய காவல் துறை, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.