திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 'எல் அண்ட் டி' தனியார் துறைமுகத்திற்கு அருகே உள்ள காட்டுப்பள்ளி கிராமத்தில் நிலக்கரி முனையம் செயல்படுத்தவும், 400 அடி சாலை அமைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது, பொக்லைன் இயந்திரங்களை முற்றுகையிட்டு அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் நிரந்தர வேலைவாய்ப்பு, மாற்று இடம் வீடு வழங்காமல் பணிகளைத் தொடங்கக் கூடாது, இதில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் போராட்டம் காரணமாக தற்போது அக்கிராமத்தில் தற்காலிகமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.