திருவள்ளூர் மாவட்டம் செஞ்சி ஊராட்சியில், ஒப்பந்ததாரர் ராஜாராம் என்பவர் ரூ.73 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைத்தார்.
இதனை ஆட்சியர் பொன்னையா ஆய்வு செய்த போது, சாலையில் கற்கள் பெயர்ந்தும், ஆங்காங்கே குண்டும் குழியுமாகவும் இருந்ததால், ஒப்பந்ததாரர் ராஜாராமை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்டார்.
ஆனால் அவர் உரிய விளக்கம் அளிக்காத பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, ஒப்பந்த பணிகள் முழுமையாக ரத்து செய்யப்படும். மேலும், மாவட்டத்தில் சாலை பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், தரமற்ற சாலைகள் போட்டால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், ஒப்பந்ததாரரின் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, ஒப்பந்ததாரர் ராஜாராமுக்கு அந்தத் தொகையில் 10 சதவீதத்தை அபராதமாக கட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: டிரைவர் இல்லாமல் செல்லும் சென்னை மெட்ரோ ரயில்!