ETV Bharat / state

தனித்துப் போட்டி என்றாலும் தேமுதிகவிற்கு பயமில்லை: விஜய பிரபாகரன்! - Vijaya Prabhakaran Press Meet

திருவள்ளூர்: வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என்றாலும் தேமுதிகவிற்கு பயமில்லை என்று விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

விஜய பிரபாகரன்  விஜய பிரபாகரன் செய்தியாளர் சந்திப்பு  தேதிமுக விஜய பிரபாகரன்  DMDK Vijaya Prabhakaran  Vijaya Prabhakaran Press Meet In Thiruvallur  Vijaya Prabhakaran Press Meet  Vijaya Prabhakaran
Vijaya Prabhakaran Press Meet
author img

By

Published : Jan 28, 2021, 9:38 PM IST

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில், "தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி பேச்சுவார்த்தை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனால், அவரவர் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

தற்போது, வரை அதிமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம். 2006 ஆம் ஆண்டே தேர்தலில் தனித்து போட்டியிட்டுள்ளதால், வரவுள்ள தேர்தலில் தனித்துப் போட்டி என்றாலும் தேமுதிகவிற்கு பயமில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரப்புரைக்கு வருவார்.

செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் விஜய பிரபாகரன்

சசிகலா முழுமையாக உடல்நலம் தேறி வர வேண்டும். அவர்களது கட்சியில் உள்ள குழப்பங்களை அவர்களே தீர்த்து கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: ‘எங்களுக்குள்ளும் சாதி இருக்கிறது’ - விஜய பிரபாகரன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.