ETV Bharat / state

நாடாளுமன்ற தேர்தலில் விசிக யாருடன் கூட்டணி - திருமாவளவன் தகவல் - நாடாளுமன்ற தேர்தலில் விசிக கூட்டணி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பரீட்சை நேரத்தில் படிக்கின்ற மாணவனைப் போல தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி பற்றியும் தொகுதிகளைப் பற்றியும் சிந்திப்பேன் என்று தெரிவித்து உள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்

author img

By

Published : Jun 12, 2023, 12:13 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்

திருவள்ளூர்: பூண்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியினுடைய தாயாரின் பட திறப்பு நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். பின் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களை கைப்பற்றுவோம் பிரதமரை உருவாக்குவோம் என்ற அனைத்தும் மக்களை ஏமாற்றும் சொற்கள், மோசடி முயற்சி.

இதனை தமிழ்நாடு மக்கள், ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் எப்படியாவது கால் ஊன்ற வேண்டும் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. அது தமிழ்நாட்டில் எடுபடாது என்பது தேர்தல் முடிவுக்குப் பிறகு தெரியும். கர்நாடக மாநிலத்தில் பல சித்து வேலைகளை செய்து பிரதமர் மோடி 9 முறை கர்நாடகாவில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஊர்வலமாக சென்றார். வாக்குகள் சேகரித்தார்.

ஆனாலும், கர்நாடக தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்து உள்ளது. இந்து சமூகத்தை நம்பி சிறுபான்மையருக்கு எதிராக பிரச்சாரம் செய்த நிலையில் கர்நாடகா இந்துக்களே பாஜகவினரை தோற்கடித்து உள்ளனர். கர்நாடகா இந்துக்கள் பாஜகவை ஏற்றுக் கொள்ளாத போது பண்படுத்தப்பட்ட தமிழ்நாட்டில் பாஜகவின் சித்து வேலை எடுபடாது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. திமுக கூட்டணியை வலிமைப்படுத்த வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் நினைக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்த வரை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் தொடரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வெறுப்பு அரசியலை விதைப்பது, மதவெறியை தூண்டுவது, மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துவது போன்றவற்றில் 24 மணி நேரமும் பாஜக கவனம் செலுத்தி வருகிறது.

சன்னியாசிகளை வைத்து யாகம் செய், புனித பசுவை பாதுகாப்போம் என முழக்கம் இடுவது என்பதில் மட்டும் கவனம் செலுத்தி விட்டு ஆட்சி நிர்வாகத்தில், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதற்கு ஒடிசா ரயில் கோர விபத்து சான்றாக விளங்குகிறது.

திமுகவின் கொள்கையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கையும் வேறு வேறு அல்ல ஒன்று தான். திமுக சமத்துவம், பொதுவுடமை பற்றி பேசும் அரசியல் கட்சி என முன்னாள் முதல்வர் கலைஞர் குறிப்பிட்டு உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி அந்தக் கொள்கை சார்ந்தே இயங்குகிறது என்பதை மதவெறி அரசியல் செய்பவர்களால் புரிந்து கொள்ள இயலாது. முதலமைச்சர் ஸ்டாலின் செயல்வீரர் சாதனையாளர். அவரைப் பின்பற்றி பல்வேறு மாநிலங்களில் செயல் திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

முன்மாதிரி ஆட்சி நிர்வாகத்தை வழங்குகின்ற வலிமை பெற்ற முதல்வராக ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். நான் பரீட்சை நேரத்தில் படிக்கின்ற மாணவனை போல தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி பற்றியும் தொகுதிகளை பற்றியும் சிந்திப்பேன்” என்று தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: பாஜக ஆட்சியில் தான் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது! அமித்ஷா பேச்சுக்கு டி.ஆர்.பாலு பதிலடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.