ETV Bharat / state

வியாபாரிகளிடம் பறிமுதல் செய்த பணத்தை உடனடியாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் - வெள்ளையன் வேண்டுகோள்! - vendors

திருவள்ளூர்: வியாபாரிகளை கொடுமைப்படுத்தும் போக்கை தேர்தல் அதிகாரிகள் கைவிட வேண்டும் என்றும் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வியாபாரிகளிடம்  திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன்
author img

By

Published : Apr 26, 2019, 8:56 AM IST

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகிருஷ்ண பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்ட விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கலந்துகொண்டார். பின்னர்,செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வரும் மே ஐந்தாம் தேதி தூத்துக்குடியில் வணிகர் சங்கங்களின் 36 மாநில மாநாடு சுதேசி பொருளாதார பிரகடன மாநாடாக நடைபெற உள்ளது. இதில் திரளான வணிகர்கள் பங்கேற்க உள்ளனர்.

அரசியல்வாதிகளின் பணப்பட்டுவாடாவுக்கு தேர்தல் அதிகரிகள் ஆதரவு அளித்து வருகின்றனர். வியாபாரிகளை கொடுமைப்படுத்தும் போக்கை தேர்தல் அதிகாரிகள் கைவிட வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வியாபாரிகளிடம் உடனடியாக திரும்ப கொடுக்க வேண்டும். தேர்தலில் யார் வெற்றி பெற்று வந்தாலும் தங்களின் உரிமைகளை காப்பாற்றமாட்டார்கள் உரிமைகளை காட்டிக் கொடுப்பார்கள். சில்லரை வணிகம், உள்நாட்டின் வர்த்தகம், விவசாயத்தை அழிப்பது தான் இவர்களின் வேலை.

மக்களும் வியாபாரிகளும் முன்வந்தால், எத்தனை தலைவர்கள் வந்தாலும் எந்த திட்டம் போட்டாலும் அது முறியடிக்கப்படும். வெளிநாட்டு நிறுவனங்கள் தானாகவே வெளிநாட்டுக்கு ஓடிவிடும் அதற்கு நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் " என்றார்.

திருவள்ளூர்

அரசியல் வாதிகளின்  பணப்பட்டுவாடா
தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வருவதாகவும் தேர்தல் அதிகாரிகள்
வியாபாரிகளை கொடுமைப்படுத்துவதாகவும் இந்தப் போக்கை தேர்தல் அதிகாரிகள் கைவிட வேண்டும் என்றும் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வியாபாரிகளிடம்  திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் 
வரும் மே 5ம் தேதி தூத்துக்குடியில் வணிகர் சங்கங்களின் 36 மாநில  மாநாடு
சுதேசி பொருளாதார
பிரகடன மாநாடாக 
 நடைபெற உள்ளதாகவும் 
இதில் திரளான வணிகர்கள் பங்கேற்க உள்ளதாகவும்
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன்  தெரிவித்தார் 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகிருஷ்ண பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்ட விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு 
வணிகர்சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன்
செய்தியாளர்களிடம் பேசுகையில்
 வரும் மே 5ம் தேதி தூத்துக்குடியில் வணிகர் சங்கங்களின் 36 மாநில  மாநாடு
சுதேசி பொருளாதார
பிரகடன மாநாடாக 
 நடைபெற உள்ளதாகவும் 
இதில் திரளான வணிகர்கள் 
தங்கள் கடைகளை  மூடி
பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்த அவர்
 அரசியல் வாதிகளின்  பணப்பட்டுவாடா
தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வருவதாகவும் தேர்தல் அதிகாரிகள்
வியாபாரிகளை கொடுமைப்படுத்துவதாகவும் இந்தப் போக்கை தேர்தல் அதிகாரிகள் கைவிட வேண்டும் என்றும் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வியாபாரிகளிடம்  திரும்ப கொடுக்க வேண்டும்
என்று கோரிக்கை வைப்பதாகவும்  
தேர்தலில் யார் வெற்றி பெற்று வந்தாலும் தங்களின் உரிமைகளை காப்பாற்ற மாட்டார்கள் என்றும் உரிமைகளை காட்டிக் கொடுப்பார்கள் சில்லரை வணிகம் உள்நாட்டின் வர்த்தகம் விவசாயத்தை அழிப்பது தான் இவர்களின் வேலை என்றும் நமது உணர்வுகளை மதிக்க மாட்டார்கள் என்றும் நமது உரிமைகளை அந்நியர்களிடம் 
காட்டிக் கொடுப்பார்கள் என்றும் 
சுதேசி பொருளாதாரம் மட்டுமே வலுவான ஆயுதம் என்றும் நம் நாட்டுப் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று மக்களும் வியாபாரிகளும் முன்வந்தால் எத்தனை தலைவர்கள் வந்தாலும் எந்த திட்டம் போட்டாலும் அது முறியடிக்கப்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் தானாகவே  வெளிநாட்டுக்கு ஓடிவிடும் அதற்கு நாம்  ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என அவர்  தெரிவித்தார்..
.visual in ftp
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.