திருவள்ளூர்: வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கோரி பாமக போராட்டங்களை நடத்திவருகிறது. 6ஆம் கட்ட போராட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் வழக்கறிஞர் பாலு தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தனர்.
தமிழ்நாட்டில் 6ஆம் கட்டமாக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி வேறுபாடின்றி வன்னியர்கள், பிற சமுதாயத்தினர் பங்கு பெற்றிருப்பதாகவும், 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் ஓயாது என்றும் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு எவ்வித தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில், பாமக மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் கே.என். சேகர் பாலா, வி.எம். பிரகாஷ், மாநில அமைப்புச் செயலாளர் வெங்கடேஷ், ஆனந்த கிருஷ்ணன், மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு: பெரம்பலூர் ஆட்சியரிடம் மனு