ETV Bharat / state

திருடர்களை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்!

திருவள்ளூர்: பொன்னேரி அருகே புதிதாக கட்டும் வீட்டிலிருந்து கட்டுமான பொருட்களை திருடிய இருவரை, பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

thieves
author img

By

Published : Aug 18, 2019, 3:20 PM IST

Updated : Aug 18, 2019, 6:21 PM IST

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியிலுள்ள தசரதன் நகர் குடியிருப்புப் பகுதியில், புதியதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் இருந்து கட்டுமானப் பொருட்கள், இரும்புகளை திருடிக்கொண்டு இருவர் ஓடியுள்ளனர்.

திருடர்களை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்

இதைக்கண்ட அப்பகுதி மக்கள், இருவரையும் துரத்திப் பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் பொன்னேரி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இருவரும் அப்பகுதியில் உள்ள பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்தது தெரியவந்தது.

Intro:பொன்னேரி அருகே புதிதாக கட்டும் வீட்டிலிருந்து கட்டுமான பொருட்களை திருடிய இருவரை பொதுமக்கள் பிடித்து, அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைப்பு. போலீசார் விசாரணை.

Body:திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கட்டுமான பொருட்களை திருடிய இருவரை பிடித்து பொதுமக்கள் அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். தசரதன் நகர் குடியிருப்பு பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றிலிருந்து கட்டுமான பொருட்கள் இரும்புகளை திருடிக்கொண்டு இருவர் ஓடியுள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவர்களைத் துரத்திப் பிடித்தனர். பிடிபட்ட இருவரையும் பொதுமக்கள் அடித்து, உதைத்து பொன்னேரி போலீசில் ஒப்படைத்தனர். இவர்கள் பூட்டிய வீடுகள் குறித்து நோட்டமிட அங்கு கொள்ளையடிக்க துப்பு கொடுப்பவர்களாக பிடிபட்டு இருவருக்கும் வடமாநில கொள்ளையர்கள் உடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Conclusion:
Last Updated : Aug 18, 2019, 6:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.