ETV Bharat / state

பெண்மணியை அரிவாளால் தாக்கி நகை, பணம் கொள்ளை - இருவர் கைது!

திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு அரிவாளால் தாக்கிவிட்டு, 16 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒன்றரை லட்சம் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

two
two
author img

By

Published : Jan 29, 2023, 9:44 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அருகே மல்லியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரியான உதயகுமாருக்கு, மாலதி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த 23ஆம் தேதி உதயகுமார் வழக்கம் போல காய்கறி வியாபாரத்திற்குச் சென்றதும், இரண்டு மகள்கள் பள்ளிக்குச் சென்று விட்டனர். மாலதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது, முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் மாடி வழியே வீட்டுக்குள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணம் ஆகியவற்றைத் தரும்படி கேட்டுள்ளார். மாலதி மறுக்கவே அவரை அரிவாளால் தாக்கிவிட்டு, கைகளையும் வாயையும் கட்டிப்போட்டுவிட்டு, பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். மாலதியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாலதிக்கு கை, கால் என ஐந்து இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஆரணி காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அதில், வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் வீட்டில் இருந்து 16.5 சவரன் நகைகள், 1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் உதயகுமார் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் மல்லியங்குப்பத்தைச் சேர்ந்த அருண்குமார் (22), மங்கலம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த ஜெய்பீ (24) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 16.5 சவரன் நகைகள் மற்றும் ஒன்றரை லட்சம் பணத்தை மீட்ட போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: அதிமுக பெண் கவுன்சிலரை கடத்திய 4 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.