ETV Bharat / state

கொலை, கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் கைது! - Two arrested in murder and robbery cases

திருவள்ளூர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கொலை, கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட இருவர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

police
police
author img

By

Published : Aug 29, 2020, 4:48 PM IST

திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி, பாலேவ்வரன் கண்டிகையைச் சேர்ந்தவர் பாஸ்கர் என்ற ரிஸ்க் பாஸ்கர் (31). இவர் மீது கொலை வழக்கு உள்பட நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோன்று வினோத்குமார்(25) என்பவர் மீதும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் பேரில், பாஸ்கர், வினோத்குமார் ஆகியோர் 110 விதியின் படி பொன்னேரி உட்கோட்ட நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மீண்டும் குற்றவழக்குகளில் ஈடுபடுவதில்லை என்று பிரமாணம் தாக்கல் செய்தனர். இதனையடுத்து, ரிஸ்க் பாஸ்கரும், வினோத்குமாரும் பிணையில் வெளிவந்தனர்.

பிணையில் வந்த இருவரும் பிரமாணத்தை மீறி மீண்டும் குற்ற வழக்கில் ஈடுபட்டதால், ரிஸ்க் பாஸ்கருக்கு 319 நாள்களும், வினோத்குமாருக்கு 125 நாள்களும் சிறையில் அடைக்க பொன்னேரி உட்கோட்ட நடுவர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ’கால்நடை மருத்துவர்கள் பணி விரைவில் நிரப்பப்படும்’ - உடுமலை ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.