கோவிட்-19 பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கும் படி மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கும், விற்பதற்கும் மட்டும் அதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்திலிருந்து அதிகளவிலான கள்ளச்சாராயம் தமிழ்நாட்டிற்கு கடத்தி வருதாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்ட காவல்துறையினர், இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்திவரப்பட்டதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த வாகனத்தில் வந்த இருவரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 35 லிட்டர் கள்ளச்சாராயத்தையும், இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு!