ETV Bharat / state

கும்மிடிப்பூண்டி அருகே காணாமல்போன சிறுமி ஏரியில் சடலமாக மீட்பு.. திடுக்கிடும் தகவல்கள்...

கும்மிடிப்பூண்டி அருகே ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட பள்ளி மாணவி கொலை வழக்கில், இருவரை கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 25, 2022, 3:34 PM IST

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே ஏரியில் இளம்பெண் ஒருவர் காயங்களுடன் ஏரியில் சடலமாக கிடப்பதாக பாதிரிவேடு போலீசாருக்குக் கிடைத்த தகவலின்படி, அங்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் உயிரிழந்தது சுற்றுவட்டார கிராமத்தைச் சார்ந்த 15 வயது சிறுமி என்பதும்; அவர் அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது.

கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப்பிரிந்து தனது தாயாரின் வீட்டில் வசித்து வரும் சிறுமியின் தாயாரிடம் நடத்திய விசாரணையில், தனது மகள் செல்போனில் பல மணிநேரம் பேசி வந்ததாகவும், அவர் சில தினங்களுக்கு கடந்த அக்.10ஆம் தேதி முதல் காணாமல் போனதாகவும் தெரிவித்தார். மேலும், சிறுமி காணாமல்போனது குறித்து ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார். செல்போனை தடயமாக வைத்து விசாரணையில் களமிறங்கிய பாதிரிவேடு போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

விசாரணையில், காணாமல்போன சிறுமியைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து பின் கொலை செய்ததாக பிரவீன்(19), 17 வயதுடைய மற்றொரு சிறுவனையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிரவீனும் சிறுமியும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற முன்தினம் பிரவீன், 17 வயது சிறுவன் ஆகியோர் கூட்டாக சிறுமியுடன் இரவில் தனிமையில் இருந்த நிலையில் வீட்டிற்குச்செல்லுமாறு பிரவீன் கூறவே, அதற்கு மறுத்த சிறுமி தன்னைத்திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

சிறுமி ஏரியில் சடலமாக மீட்பு..போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

இதனால், ஆத்திரமடைந்த பிரவீன் அருகில் இருந்த மரக்கட்டையால் தாக்கியுள்ளார். பின்னர் இருசக்கர வாகனத்தில் இருந்த கயிறை எடுத்து சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் அவ்விருவரும் வாக்குமூலம் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாதிரிவேடு போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் இன்ஸ்டா காதல் மன்மதன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.