ETV Bharat / state

மாமனாரின் பாலியல் தொந்தரவால் தூக்கிட்டு தற்கொலை செய்த மருமகள்! - திருத்தணி

திருவள்ளூர்: திருத்தணி அருகே மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளான மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ACCUSED_ARREST
author img

By

Published : May 10, 2019, 10:07 AM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிகிருஷ்ணன். இவர் ஒரு லாரி ஓட்டுநர். இவரது மனைவி யுவராணி. இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்த நிலையில் முனிகிருஷ்ணன் வெங்கடாபுரம் கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். ஓட்நரான இவர் இரவு நேரங்களில் வேலைக்கு சென்று விடுவார். இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய மாமனார் டில்லி பாபு, மகன் இல்லாத நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் மருமகளுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார்.

இது குறித்து யுவராணி தனது கணவரிடம் கூறியபோது, தனது தந்தை மீது வீணாக பழிபோடாதே என்று முனிகிருஷ்ணன் மனைவியை கண்டித்திருக்கிறார். இந்த நிலையில் மாமனாரின் பாலியல் தொந்தரவு கொடுமையால் மன உளைச்சலுக்கு ஆளான யுவராணி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் சேகர் தலைமையிலான குழு , உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாலியல் தொந்தரவால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட பெண்

மேலும், சந்தேகத்தின் பேரில் கணவர் முனிகிருஷ்ணன் மற்றும் மாமனார் டில்லி பாபு ஆகிய இருவரையும் அழைத்துவந்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். இவர்கள் இருவரும் தான் யுவராணியின் தற்கொலைக்கு முக்கிய காரணம் என்று விசாரணையில் தெரியவந்ததால், இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Intro:திருத்தணி அருகே மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததால் மன உளைச்சல் ஏற்பட்ட மருமகள் தூக்கிட்டு தற்கொலை

Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தைச் சார்ந்தவர் லாரி ஓட்டுனர் முனிகிருஷ்ணன் இவருக்கு பள்ளிப்பட்டு அருகே உள்ள கரும்பேடு கிராமத்தில் சேர்ந்த யுவராணி அவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வெங்கடாபுரம் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் ஓட்டுநரான முனிகிருஷ்ணன் இரவு நேரங்களில் வேலைக்கு சென்று விடுவார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட மாமனார் டில்லி பாபு மகன் இல்லாத நேரத்தில் மருமகளிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதைக் கண்டித்து யுவராணி தன் கணவரிடம் பலமுறை எடுத்துக் கூறியும் தனது தந்தை மீது வீண் பழி சுமத்தாதே என்று மனைவியை கண்டித்துள்ளார்.இந்நிலையில் டில்லி பாபு என்பவர் மருமகளிடம் தனிமையில் இருக்கும் போது பாலியல் தொந்தரவு கொடுத்த யுவராணியை மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதை கணவரிடம் சொன்னாலும் கணவன் நம்பவில்லை இதை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்ற யுவராணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட துணை கண்காணிப்பாளர் சேகர் தலைமையில் குழு அமைத்து பிரேதத்தை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் சந்தேகத்தின் பெயரில் கணவன் முனி கிருஷ்ணனையும் மற்றும் மாமனார் டில்லி பாவையும் அழைத்து வந்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். இவர்கள் இருவரும் யுவராணியின் தற்கொலைக்கு முக்கிய காரணம் என்று விசாரணையில் தெரிய வந்ததால் இவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.