திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள ஆரணி ஆற்றினையொட்டி 60க்கும் மேற்பட்ட இருளர், பழங்குடியின மக்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், நீர்நிலை புறம்போக்கு பகுதியில் வசிப்பதாகக் கூறி மாவட்ட நிர்வாகத்தினர் அவர்களை பாலவாக்கம் ஊராட்சியில் தங்கவைத்துள்ளனர்..
ஆனால் அப்பகுதியில் மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் சரிவர இல்லை என்றும் பள்ளி, மருத்துவமனை செல்ல இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை நடக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
வீடு இல்லாததால் தான் புறம்போக்கு இடங்களில் தங்கி சிரமப்பட்டு வருவதாக கூறிய அவர்கள், தாங்களுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: தனியார் மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு - உறவினர்கள் முற்றுகை போராட்டம்