திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகேயுள்ள காந்திநகர் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் அரசின் பசுமை வீடு திட்டத்தில் தொகுப்பு வீடுகளை வழங்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே இன்று (நவ.9) திருநங்கைகள் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாயை விரித்து படுத்து உறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: திருநங்கைகளின் பசுமை வீடு... சுயம்பாய் வாழ வழிகாட்டிய தூத்துக்குடி ஆட்சியர்!