ETV Bharat / state

மேம்பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு! - திருவள்ளூர் மேம்பாலப் பணி

திருவள்ளூர்: புட்லூர் ரயில்வே கேட் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் மேம்பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

tiruvallur youngster fell into a bridge construction pit
இளைஞர் பலி
author img

By

Published : Jun 14, 2020, 3:27 PM IST

ராணிப்பேட்டை மாவட்டம் கொத்தியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலுமணி (35). இவர் திருவள்ளூரை அடுத்த புட்லூரில் தங்கி காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்துவந்தார். இந்நிலையில், இவர் நேற்று முன்தின (ஜூன் 12) இரவு 9 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் திருவள்ளூருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தபோது, புட்லூர் ரயில்வே கேட் அருகே மேம்பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்துள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பாலுமணியின் சடலத்தைக் கைப்பற்றி உடற் கூறாய்விற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

விபத்து குறித்து அப்பகுதியினர் கூறும்போது, "மேம்பாலப் பணி நடைபெறும் இடத்தில் பொதுமக்களுக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. அப்பகுதியில் மின் விளக்குகள் அமைக்காமல் இருப்பதால் இதுபோன்ற விபத்துகள் இரவு நேரத்தில் ஏற்படுகின்றன. எனவே, மேம்பாலப் பணிகள் செய்துவரும் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: உ.பி-யில் கணவரை ‌கொன்ற மனைவி கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.