ETV Bharat / state

நிலை தடுமாறி கால்வாயில் விழுந்த முதியவர் உயிரிழப்பு! - திருவள்ளூர்

திருவள்ளூர்: கிருஷ்ணா கால்வாயில் முதியவர் நிலை தடுமாறி விழுந்ததில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்
திருவள்ளூர்
author img

By

Published : Apr 28, 2021, 8:51 PM IST

திருவள்ளூர் மாவட்டம், என்ஜிஓ காலனி பகுதியில் வசிப்பவர் 72 வயதுடைய பாலையன். இவர் திருவள்ளூர் ஈக்காடு பகுதியிலுள்ள உறவினர் வீட்டிற்கு இன்று (ஏப். 28) காலை சென்றுள்ளார். அப்போது, தனது இருசக்கர வாகனத்தை கிருஷ்ணா கால்வாய் கரையோரம் நிறுத்திவிட்டு, இயற்கை உபாதை கழிப்பதற்காக கால்வாய் அருகே சென்றபோது, நிலை தடுமாறி தண்ணீரில் தவறி விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புல்லரம்பாக்கம் காவல் துறையினர், தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சுமார் ஒன்பது மணி நேர தேடலுக்குப்பின், இறந்த நிலையில் பாலையனின் உடலை மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து புல்லரம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.