ETV Bharat / state

அரசு பள்ளியில் திருடிய கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு! - காவலாளியை கட்டிப் போட்டு திருட்டு

திருவள்ளூர்: பழவேற்காட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் காவலாளியை கட்டிப்போட்டு 14 லேப்டாப்கள், தொலைக்காட்சி பெட்டிகள் ஆகியவற்றை திருடிச் சென்ற கும்பலை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

காவலாளியை கட்டிப்போட்டு திருட்டு
காவலாளியை கட்டிப்போட்டு திருட்டு
author img

By

Published : Aug 11, 2020, 12:44 PM IST

திருவள்ளூர் மாவட்டம் அருகேயுள்ள பழவேற்காட்டில் ஜகதாம்பாள் சுப்பிரமணியம் அரசினர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது.

இந்தப் பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்துவதற்காக 40க்கும் மேற்பட்ட லேப்டாப்கள் கணினி அறையில் வைக்கப்பட்டிருந்தன.

தற்போது கரோனா ஊரடங்கால் பள்ளி மூடப்பட்டுள்ளது. இதனால் இரவில் பாதுகாப்பிற்காக காவலாளி முக்குந்தய்யன் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். நேற்று (ஆகஸ்ட் 10) முதியவர் பள்ளியில் காவல் பணியில் இருந்துள்ளார்.

காவலாளியை கட்டிப்போட்டு திருட்டு

அப்பொழுது ஐந்து பேர் கொண்ட கும்பல் பள்ளியில் புகுந்து காவலாளியின் கை, கால்கள், வாயைக் கட்டிப் போட்டு கணினி அறையில் இருந்த 14 லேப்டாப், டிவிகள் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் திருப்பாலைவனம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிசிடிவி காணொலி பதிவுகளை வைத்து திருட்டு கும்பலை தேடி வருகின்றனர்.

அரசுப் பள்ளியில் திருட்டப்பட்ட சம்பவம் பழவேற்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பணப் பிரச்னை: இருவருக்கு அரிவாள் வெட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.