திருவள்ளூர் மாவட்டம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படுகிறதா எனவும் அடிப்படை வசதிகள் குறித்தும் திருவள்ளூர் திமுக எம்.எல்.ஏ. ராஜேந்திரன் நேரில் ஆய்வு செய்தார், அப்போது நோயாளிகளிடம் அடிப்படை சிகிச்சை முறைகள் கூறித்து நேரில் கேட்டறிந்தார்.
மேலும் நேற்று ராஜேந்திரன் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே கம்பிவேலியை அகற்றக்கோரி ரயில்வே நிர்வாகத்திடம் முறையிட்டதை அடுத்து இன்று கம்பி வேலிகளை ரயில்வே நிர்வாகம் அகற்றியுள்ளனர்.
இதற்காக நேரில் சென்று ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து ரயில்வே அதிகாரிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.
இதையும் படிங்க: விசாரணைக் கைதி தப்பியோட்டம்