திருவள்ளூர் பெருமாள் செட்டித் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(43). இவர் திருவள்ளூரில் கவரிங் நகை வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
இவர் குடிபழக்கம் அதிகம் உள்ள நிலையில் ஊரடங்கால் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை10) காலை வீட்டிலிருந்து காணாமல் போனார். இதையடுத்து செந்தில் குமாரின் தாயார் வசந்தா திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இதற்கிடையில் நேற்று (ஜூலை 11) காலை திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற வீரராகவர் கோயில் குளத்தில் பிணமாக கிடந்தார்.
அவரது உடலை கைப்பற்றிய காவலர்கள், உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: காணாமல்போன பாலிடெக்னிக் மாணவர் கடற்கரையில் சடலமாக மீட்பு!