ETV Bharat / state

Mandous Cyclone:பழவேற்காடு-காட்டுப்பள்ளி துறைமுக சாலை துண்டிப்பு!

author img

By

Published : Dec 9, 2022, 12:56 PM IST

திருவள்ளூர் மாவட்டம், மாண்டஸ் புயலின் (Mandous Cyclone) எதிரொலியாக பழவேற்காடு-காட்டுப்பள்ளி துறைமுகம் இடையே ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் அப்பகுதியில் சாலை வழிப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

திருவள்ளூர்: மாண்டஸ் புயலின் (Mandous Cyclone) எதிரொலியாக, பழவேற்காடு-காட்டுப்பள்ளி துறைமுகம் இடையே இன்று (டிச.9) கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால், சாலை வழிப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை மார்க்கமாக தினசரி பொன்னேரி, பழவேற்காடு உள்ளிட்டப் பகுதிகளிலிருந்து காட்டுப்பள்ளி அதானி துறைமுகம், எல்என்டி ஷிப்பிங் பில்டிங், எண்ணூர் காமராஜர் துறைமுகம், வடசென்னை அனல் மேல் நிலையம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் வேலைக்கு தினசரி சென்று வருகின்றனர்.

இந்நிலையில், மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கக்கூடும் என வானிலை அறிக்கை விடுத்த நிலையில், காலை முதல் தரைக்காற்று பலமாக வீசி வருகிறது. இதனால், கடல் வழக்கத்திற்கு மாறாக 10 அடிக்கும் மேலாக கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கடல் நீர் அருகிலுள்ள ஆற்றில் கலப்பதால் சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

Mandous Cyclone:கொந்தளிப்பில் கடல்..பழவேற்காடு-காட்டுப்பள்ளி துறைமுகம் சாலை துண்டிப்பு!

இதனிடையே, அவ்வழியாக அன்றாடம் பணிக்கு செல்வோர் பணியிடங்களில் முடங்கியுள்ளனர். இந்நிலையில், சிலர் தங்களின் வீடுகளுக்கு ஆபத்தான முறையில் தங்கள் உயிரையும் பணயம் வைத்து பழவேற்காடு பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்புகின்றனர். தொடர்ந்து, நீண்ட நாட்களாக உள்ள இப்பிரச்னையின் மீது அரசு கவனம் கொண்டு, அப்பகுதியில் தகுந்த முறையில் மேம்பாலம் அமைத்துத் தரவேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: மாண்டஸ் புயல் எப்போது கரையை கடக்கும்.? பாலச்சந்திரன் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.