ETV Bharat / state

'அமைதியான முறையில் நடைபெற்றது தேர்தல்' - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

திருவள்ளூர்: காவல் துறையினரின் சிறப்பான ஏற்பாட்டால் சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்ததாக மாவட்டத் தேர்தல் அலுவலர் பா. பொன்னையா தெரிவித்துள்ளார்.

collector
collector
author img

By

Published : Apr 7, 2021, 7:51 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று (ஏப்ரல் 6) காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் காவல் துறையினரின் சிறப்பான ஏற்பாட்டால் சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்ததாக மாவட்டத் தேர்தல் அலுவலர் பா. பொன்னையா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பா. பொன்னையா ஈடிவி பாரத்துக்குச் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், "காவல் துறையினரின் சிறப்பான பாதுகாப்பு ஏற்பட்டால் எவ்வித அசம்பாவிதமுமின்றி நல்ல முறையில் தேர்தல் நடைபெற்றது. காலை முதல் 12 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரக்கோளாறு ஏற்பட்டு 20 நிமிடங்களில் சரிசெய்யப்பட்டது.

மாவட்டத் தேர்தல் அலுவலர் பா. பொன்னையா

அதேபோல் 18 இடங்களில் விவிபேட் இயந்திரக்கோளாறு ஏற்பட்டு அதுவும் சரிசெய்யப்பட்டது. இம்மாவட்டத்தில் உள்ள கரோனா நோயாளிகள் 255 பேர் நேரடியாக வந்து வாக்களிப்பதாக விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆனால் மாலை 6 மணிக்கு மேல் 44 பேர் மட்டுமே நேரில் வந்து வாக்களித்துள்ளனர்.

வாக்குப்பதிவு நிறைவடைந்ததையொட்டி அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் பெருமாள்பட்டியிலுள்ள ஸ்ரீராம் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.

ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரியில் மதுரவாயல் அம்பத்தூர், திருவொற்றியூர், மாதவரம் ஆகிய தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஸ்ரீராம் கலைக்கல்லூரியில், திருவள்ளூர் திருத்தணி ஆகிய இரண்டு தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஸ்ரீராம் வித்யா மந்திர் வளாகத்தில், பூந்தமல்லி, ஆவடி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அதற்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்படும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.