ETV Bharat / state

திருவள்ளூர் மாவட்ட கரோனா பாதிப்பு புள்ளி விவரங்கள் - திருவள்ளூர் மாவட்ட கரோனா புள்ளிவிவரங்கள்

திருவள்ளூர்: கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள், பரிசோதனைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மகேஷ் ரவிக்குமார் புள்ளி விவரங்களைத் தெரிவித்துள்ளார்.

tiruvallur District Collector Mahesh Ravikumar has released statistics on corona prevention activities

author img

By

Published : Apr 24, 2020, 11:39 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மகேஷ் ரவிக்குமார் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.

அப்போது, மாவட்டத்தில் தற்போதுவரை நோய்த் தொற்றால் 50 பேர் பாதிப்படைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதில் 13 பேர் நோய்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தீனதயாளன் கட்டடங்களில் கரோனா தொற்று அறிகுறியுடன் இருந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 எனவும், காவல் துறை பயிற்சி மையங்களில் 74 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் எனவும், திருத்தணி ஜி.ஆர்.டி. கல்லூரி விடுதியில் 49 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் எனவும், பூவிருந்தவல்லி பொது சுகாதார நிறுவனத்தில் 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் எனவும், மாவட்டத்தில் மொத்தம் 18 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆட்சியர் மகேஷ் ரவிக்குமார்

மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 173 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 973 பேரின் மாதிரிகளில் எவ்வித நோய்த் தொற்று அறிகுறிகளும் இல்லை எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கரோனா சூழல்: தாராவியிலிருக்கும் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.