திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்து துறைச் சார்பாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள 1,852 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் 100 ரூபாய் மதிப்பிலான காய்கறிகளை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, கைக்கழுவுதல், யோகா ஆகியவைகள் குறித்த விழிப்புணர்வு கையேடுகளை வழங்கிய திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ) லோகநாயகி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.ஜவஹர்லால் ஆகியோர் நிலவேம்பு, கைகளில் தடவக்கூடிய கிருமி நாசினிகளையும் கிராமக் குழுவினருக்கு வழங்கினர்.
இதையும் படிங்க: திருச்சி மருத்துவமனையில் வெளிமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு