கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், வாழ்வாதாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து திருவள்ளூரில் உள்ள தமிழ் தேசிய மக்கள் விழிப்புணர்வு நலச் சங்கம், கே.ஜி.எம். அறக்கட்டளையைச் சேர்ந்த இளைஞர்கள் கடந்த 25ஆம் தேதியில் இருந்து இதுவரை தொடர்ந்து மதிய உணவு, மாலை, இரவு என டீ, பிஸ்கட் வழங்கி வருகின்றனர்.
இந்த தன்னார்வ இளைஞர்கள்; திருவள்ளூர் பஸ் நிலையம், ரயில் நிலையம், பெரியகுப்பம், மணவாள நகர் போன்றப் பகுதிகளில் ஆதரவற்றவர்கள், வீடற்றவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே மோட்டார் இருசக்கர வாகனத்தில், சென்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கி வருகின்றார்கள்.
இதையும் படிங்க: திருநங்கையின் கரோனா விழிப்புணர்வுப் பாடல்!