திருவள்ளூர் மாவட்டம்: கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக் குப்பத்தில் சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் மூன்று பேர் ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்று உள்ளனர். அப்போது இளைஞர்கள் பைக்கில் செல்வதை வீடியோ எடுத்தபடியே முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
இதில் லாரியை முந்திச்செல்ல முயலும்போது, இரு சக்கர வாகனம் விபத்தில் சிக்கி உள்ளது. இதனால் மூவரும் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் இருந்து சிதறி விழுந்து உள்ளனர். மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ளோர் காவல் துறைக்குத் தகவல் கொடுத்து உள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: கள்ள மது குடித்த இருவர் பலி.. மதுவில் சயனைடு விஷம் கண்டுபிடிப்பு... திட்டமிட்ட கொலையா?
விசாரணையில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த தயாளன் (வயது 19), சார்லஸ் (வயது 21) மற்றும் ஜான் (வயது 20) ஆகிய மூவரும் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து காவல் துறையினர் மூன்று சடலங்களையும் கைப்பற்றி உடற்கூராய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தைக் குறித்து வழக்குப் பதிவுசெய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரையும் கைது செய்ததோடு தொடர் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'கர்ப்பிணினு கூட பாக்காம ரூம்ல லாக் பண்ணி அடிச்சாங்க' பெண் வழக்கறிஞருக்கு நேர்ந்த சோகம்