ETV Bharat / state

திருவள்ளூரில் 386 சேவல்கள் கலந்து கொண்ட மெகா சேவல் சண்டை போட்டி

திருத்தணி அருகே சேவல் சண்டை போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருத்தணி அருகே 386 சேவல்கள் கலந்து கொண்ட மெகா சேவல் சண்டை போட்டி

author img

By

Published : Jan 20, 2023, 1:02 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி விளக்கணாம்பூடி புதூர் கிராம மக்கள் ஏற்பாட்டில் வெற்று கால் சேவல் சண்டை போட்டி சென்னை உயர் நீதிமன்ற அனுமதி உடன் நேற்று (ஜனவரி 19) நடைபெற்றது. இந்த போட்டியில் அசம்பாவிதங்கள் எதுவும் நேராமல் இருக்க திருத்தணி டி.எஸ்.பி விக்னேஷ் தலைமையில் 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின் சேவல்கள் சண்டை போட்டியில் பங்கேற்றன.

இந்த போட்டியில் பங்குபெற ஒரு சேவல்களுக்கு ரூபாய் 1,200 என போட்டியாளர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெற்ற சேவல் சண்டை போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடக மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து என மொத்தம் 386 சேவல்கள் கலந்து கொண்டன.

இறுதி நாளில் குறைந்த நொடிகளில் வெற்றி பெற்ற சேவல்களுக்கும், சமன் செய்த கோழிகளுக்கும், வெற்றி பெற்ற சேவல்களுக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டன. இதில் சிறப்பு அழைப்பாளராக காவல்துறை ஆய்வாளர் ராஜூ 37 நொடிகளில் வெற்றி பெற்ற ராணிப்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது சேவலுக்கு முதல் பரிசு வழங்கினார். இந்த சேவல் உரிமையாளருக்கு பரிசு கோப்பை பாராட்டு சான்றிதழ்களை ஆய்வாளர் வழங்கினார்.

திருத்தணி அருகே 386 சேவல்கள் கலந்து கொண்ட மெகா சேவல் சண்டை போட்டி

இதே போல் இரண்டாம் பரிசு 57 நொடிகளில் வெற்றி பெற்ற சேவல் உரிமையாளர் ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த விஜய் என்பவருக்கு காவல்துறை ஆய்வாளர் பரிசு கோப்பை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் போட்டியில் வெற்றி பெற்ற 97 சேவல்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் சமன் செய்த சேவல் உரிமையாளர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது

இதையும் படிங்க: AR Rahman ஸ்டுடியோவில் பரிதாபம் - 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த மின் உதவி பொறியாளர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.