ETV Bharat / state

பிறந்து 3 நாள்களேயான குழந்தையை கோயிலில் வைத்துச் சென்றது யார்? - baby left in temple in thiruvallur

திருவள்ளூரில் பிறந்து மூன்று நாள்களேயான பெண் குழந்தையைக் கோயிலில் வைத்துச் சென்றவர் யார் எனக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

குழந்தை  கோயிலில் விட்டு செல்லப்பட்ட குழந்தை  விட்டு செல்லப்பட்ட குழந்தை  காணாமல் போன குழந்தை  திருவள்ளூர் செய்திகள்  thiruvallur news  thiruvallur latest news  baby left in temple  baby left in temple in thiruvallur  Three days old baby left in temple in thiruvallur
குழந்தை
author img

By

Published : Oct 16, 2021, 11:17 AM IST

திருவள்ளூர்: பூண்டி ஒன்றியத்திற்குள்பட்ட கிராமத்தில், ஒதுக்குப்புறமாக செல்லியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இரவு 8 மணி அளவில், யாரோ ஒருவர் பிறந்து மூன்று நாள்களேயான பெண் குழந்தையைப் படிக்கட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.

இதனை கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்யவந்த முடிதிருத்தும் பணியைச் செய்யும் பாபு என்பவர் கண்டு அதிர்ந்துள்ளார். பின்னர் கிராம மக்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ஜெயவேல் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று குழந்தையை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குழந்தையை யாரேனும் விட்டுச்சென்றுள்ளனரா அல்லது குழந்தை கடத்தப்பட்டுள்ளதா எனத் தீவிர விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: பெண் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய அவலம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.