ETV Bharat / state

நகைக்கடை உரிமையாளருக்கு துப்பாக்கியால் மிரட்டல்! - அணு ஜுவல்லரி

திருத்தணி அருகே நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கியால் மிரட்டிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகைக்கடை உரிமையாளருக்கு துப்பாக்கியால் மிரட்டல்

author img

By

Published : Dec 7, 2022, 12:50 PM IST

திருவள்ளூர்: அம்மையார்குப்பம், பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் அணு ஜுவல்லரி என்ற நகைக்கடையை அனுமந்த் குமார் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சென்னையில் இருந்து நேற்று (டிச.6) அவர், நகை வாங்கிகொண்டு ரயில் மூலம் திருத்தணிக்கு வந்தார்.

அங்கிருந்து தனது சொந்த காரில் அம்மையார்குப்பம் நோக்கி சென்றார். அப்போது அவரது கார் கண்ணாடியை அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்கினர்.

நகைக்கடை உரிமையாளருக்கு துப்பாக்கியால் மிரட்டல்

இது குறித்து அவர், ஆர்.கே.பேட்டை பஜார் பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசாரிடம் புகார் தெரிவித்துவிட்டு மீண்டும் காரில் சென்றார். அம்மையார்குப்பம் அருகே தனியார் பள்ளி வளைவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், நகைக்கடை உரிமையாளர் காருக்கு நேராக துப்பாக்கியை நீட்டி மிரட்டி உள்ளனர்.

இதில் மிரண்டு போன நகைக்கடை உரிமையாளர் காரை விட்டு இறங்காமல் இருந்தார். காரை வேகமாக எடுக்க அவர் முயற்சி செய்தார். பதட்டம் அடைந்த கொள்ளையர்கள், அந்த பகுதியில் இருந்து மின்னல் வேகத்தில் தப்பிசென்றனர்.

இந்த சம்பவம் குறித்து நகைக்கடை உரிமையாளர் ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சந்தேகத்தின்பேரில் நகைக்கடை உரிமையாளரின் முன்னாள் கார் ஓட்டுநர் ஏழுமலை என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகைக்கடை உரிமையாளர் ஒவ்வொரு வாரமும் 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை மதிப்பிலான நகையை வாங்கி கொண்டு வருவதை கேள்விப்பட்டுதான், கொள்ளையர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மதுபானம் வாங்க சிலை திருடிய இளைஞர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.