திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்குள்பட்ட 15ஆவது வார்டில் உள்ள அபிராமி நகர், வெங்கடேஸ்வரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் முறையாக அமைக்கப்படாத கழிவுநீர் கால்வாய்கள், பாதைகளில் தேங்கியுள்ள கழிவுநீர், முறையாக அப்புறப்படுத்தப்படாத குப்பை இவைகளால் கொசுக்கள் உற்பத்தியாவதோடு நோய் தொற்றும் ஏற்படுகிறது.
அப்பகுதியினர் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் நகராட்சி அலுவலர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தச் சுகாதாரச் சீர்கேட்டால் அப்பகுதியைச் சேர்ந்த தசரதன், நாகஜோதி, வைஷ்ணவி, அனிதா, வனிதா, சித்ரா, அந்தோணி ராஜ் உள்பட பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள், "நாங்கள் பலமுறை புகார் அளிக்கச் சென்றபோதும் நகராட்சி அலுவலர்கள் எங்களை கண்டுகொள்ளவில்லை. இனியும் அவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நாங்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்" என்றனர். எங்கள் பிள்ளைகள் மட்டும் நோய்வாய்ப்படுவது எங்கள் தலையெழுத்தா? என்றும் வேதனையுடன் கேள்வி எழுப்பினர்.
இதையும் படியுங்க:
தனியார்மயத்தைத் தீவிரப்படுத்தும் மத்திய அரசு; குறைகிறதா பொதுத்துறை பங்குகள்?