ETV Bharat / state

குப்பைகளில் 30 கோடி அள்ளிய நகராட்சி ஆணையர்! - municipality commissioner

திருவள்ளூர் : திருவேற்காடு நகராட்சி ஆணையர் சித்ரா குப்பை அகற்றும் பணியில் சுமார் 30 கோடி  ரூபாய்  வரை முறைகேடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

திருவேற்காடு நகராட்சி
author img

By

Published : Apr 30, 2019, 9:06 AM IST

ஆவடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 30 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதனால், அனைத்து நகராட்சிகளிலும் 2016 திடக்கழிவு மேலாண்மை சட்டத்தின்படி, குப்பைகளை தரம்பிரிக்க உரக்கிடங்கு, இயந்திரம், வாகனம் போன்றவற்றிற்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மூன்று கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, திருவேற்காடு நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் விதிமுறைப்படி தரம் பிரிக்கப்பட்டு மக்காத குப்பைகளை அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டாலே திருவேற்காடு நகராட்சி, குப்பைகள் இல்லாத நகரமாக இருக்கும்.

ஆனால், திருவேற்காடு நகராட்சி ஆணையர் சித்ரா, சுகாதார ஆய்வாளர் சாமுவேல் ஆகியோர் விதிகளை மீறி செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதாவது, மத்திய அரசு ஒதுக்கும் பல கோடி ரூபாய் பணத்தை கையாடல் செய்வதற்காக, டன் கணக்கில் குவியும் குப்பைகளை இரவு நேரங்களில், யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அயனம்பாக்கத்தில் உள்ள காலி நிலத்தில் பூமிக்கு அடியில் கொட்டி அதன் மீது மண்ணை போட்டு புதைத்துவருகின்றனர். இதுவரை அங்கு ஆயிரக்கணக்கான டன் குப்பைகள் புதைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

thiruverkadu

மேலும், நகராட்சி ஆணையர் சித்ரா பூவிருந்தவல்லி நகராட்சியில் இருந்தபோது குப்பை அகற்றுவதில் 30 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்தது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. எனவே, நகராட்சி ஆணையரின் ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பிரத்யேக காட்சிகளுடன்

ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட  திருவேற்காடு நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.இங்கு நாள் ஒன்றுக்கு சுமார்  30 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.இதில் 10 டன்னுக்கு மேல் மக்கும் குப்பை.அனைத்து நகராட்சிகளிலும் மத்திய அரசின்  2016 சாலிட் வேஸ்ட் மேனேஜ்மென்ட் சட்டத்தின்படி  மக்கும் குப்பையை உரமாகவும், மக்காத பிளாஸ்டிக் பை போன்ற குப்பைகளை தனியாக பிரித்து எடுக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை. இதற்கான திட்டத்தில் தான்  மத்திய அரசு நிதியுடன்
 திருவேற்காடு நகராட்சியில்  குப்பைகளை தரம்பிரிக்க உரக்கிடங்கு ,இயந்திரம் ,வாகனம் என சுமார் 3 கோடி ருபாய் வரை செலவிடப்பட்டுள்ளது.இதேபோல் நகராட்சியில் மாதம்,மாதம் குப்பைகளை சேகரிப்பது, அகற்றுவது ,அதற்கான ஒப்பந்த ஊழியர்களின் சம்பளம்  என 50 இலட்சத்திற்கு அதிகமாக  ஒதுக்கப்படுகிறது .

திருவேற்காடு நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை விதிமுறைப்படி மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளை அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனும்பினாலே நகராட்சி,குப்பைகள் இல்லாத நகரமாக இருக்கும்.ஆனால் குப்பை அகற்றுவதில் ஆண்டுக்கு ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய் பணத்தை  கையாடல் செய்யவே திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள் சட்டவிரோத செயலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

திருவேற்காடு நகராட்சி ஆணையர் சித்திரா மற்றும் சுகாதார ஆய்வாளர் சாமுவேல் ஆகியோர் அரசு விதிமுறைகளை மீறி  
திருவேற்காடு நகராட்சியில் மலைபோல் சேகரிக்கப்படும்  டன் கணக்கான குப்பைகளை கோலடி ஏரி அருகே கொட்டி பின்னர்,
 அங்கிருந்து அதனை  இரவு நேரங்களில்  யாருக்கும் தெரியாமல் தனியார் டிப்பர் லாரிகளை கொண்டு இரகசியமாக  அயனம்பாக்கத்தில் உள்ள ஒரு காலி நிலத்தில் பூமிக்கு அடியில் கொட்டி அதன் மீது மண்ணை போட்டு புதைத்து வருகின்றனர். இது வரை அங்கு ஆயிரக்கணக்கான  டன் குப்பைகள் புதைக்கப்பட்டுள்ளது.
இந்த செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.நிலத்திற்கு அடியில் புதைக்கப்படும் குப்பையால்   அயனம்பாக்கம் ஊரில் நிலத்தடி நீர்  வேகமாக மாசு ஏற்பட்டு தொற்று நோய்  பரவி வருகிறது.அதே போல் நிலத்திற்கு கீழே குப்பைகளை கொட்டி மூடுவதால் அந்த நிலத்தில் வரும் காலங்களில் கட்டிடங்கள் கட்டினால் அதன் உறுதி தன்மை கேல்வி குறியாகும். 

இது ஒருபுறம் இருக்க இதேபோல் திருவேற்காடு நகராட்சி நிர்வாகம்   திருவள்ளூர் மாவட்டம் ,கூடபாக்கத்தில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு குடிநீர் செல்லக்கூடிய கிஷ்ணா கால்வாய் அருகே உள்ள நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டி எரித்து வருகின்றனர். சட்டவிரோதமாக நீர்நிலைப் பகுதியில் குப்பைகளை கொட்டி எரித்து வருவதால் காற்றில் டாக்சின் கலந்து புற்றுநோய் பரவும் அபாயம் இருபதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

திருவேற்காடு நகராட்சி  ஆணையர் சித்ரா மீது பல்வேறு ஊழல் புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.குறிப்பாக ஆணையர் சித்ரா பூவிருந்தவல்லி நகராட்சியில் இருந்த போதும் குப்பை அகற்றுவதில் 30 கோடி  ரூபாய்  வரை முறைகேடு செய்து இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளியாகியுள்ளது.பூவிருந்தவல்லியில் இருந்து திருவேற்காடு நகராட்சிக்கு பணி மாறிய போது ஆணையர் சித்ரா அரசு பணத்தை கொள்ளை அடிக்கவே பூவிருந்தவல்லியில் இருந்த சுகாதார ஆய்வாளர் சாமுவேல் உள்ளிட்ட அதிகாரிகள் முதல் ஒப்பந்த ஊழியர் வரை அவருக்கு சாதகமானவர்களை திருவேற்காடு நகராட்சிக்கு அழைத்து சென்றுவிட்டதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அதேபோல் ஆணையர் சித்திராவிற்கு அமைச்சர்கள் மற்றும்  நகராட்சிகளின் நிர்வாக ஆணையகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்  தொடர்பு இருப்பதால்  அவரை மாவட்ட ஆட்சியர் கூட கண்டு கொள்வதில்லை என்பது பொதுமக்களின் புகாராக உள்ளது.எனவே ஆணையரின் ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.அரசு பணம் பல கோடி செலவு செய்து குப்பைகளை அகற்ற வசதி செய்து கொடுத்தும் ஊழல் செய்வதற்காகவே அதிகாரிகள்  விதிமுறைகளை மீறுவது கண்டிக்கதக்கது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.