திருவள்ளூர் மாவட்டம் தலக்காஞ்சேரி ஊராட்சியில் இளைஞர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் இணைந்து குற்ற சம்பவங்களை குறைப்பதற்காகவும், குற்றச் சம்பவங்கள் நடந்தால் அதனை எளிதில் கண்டறியும் நோக்கத்திலும் கிராமத்தைச் சுற்றி 20 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.
அதன் இயக்கத்தை திருவள்ளூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் துரைப்பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தலக்காஞ்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் பாபு துணைத்தலைவர் விஜயன், கிராம இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 1 லட்சம் ரூபாய் நிதியை தூய்மைப் பணியாளர்களிடம் கொடுத்து வழங்கிய நாளைய பாரதம் குழு!