திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் வீட்டுமனைப்பட்டா, சாதி சான்றிதழ், தொகுப்பு வீடு, கடனுதவி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர மறுக்கும் ஆவடி வட்டாட்சியரைக் கண்டித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மீரா திரையரங்கம் அருகே மேளம் அடித்து பாடல் பாடி ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார்.
வட்டாட்சியருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய மலைவாழ் மக்கள், ஆவடியில் வீட்டுமனைப் பட்டா, சாதி சான்றிதழ், தொகுப்பு வீடு, கடனுதவி, விலையில்லா கறவை மாடுகள் வழங்க வேண்டும், அடிப்படை வசதிகளை செய்து தர மறுக்கும் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுத்து மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதையும் படிங்க : 'எங்கேயும் காதல்' - சாதி, மதம், மொழி, நாடு கடந்து வென்ற தமிழரின் காதல்