ETV Bharat / state

திருவள்ளூரில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்!

திருவள்ளூர்: கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கிவந்து, திருவள்ளூரில் விற்பனை செய்துவந்த பெண்ணிற்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு
author img

By

Published : Apr 30, 2020, 10:41 AM IST

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஊரடங்கின்போதும் பால், காய்கறி மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் திறக்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா தீநுண்மி பரவல் தீவிரம் அடைந்துவருகிறது. இதில், சென்னை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 54 பேரில், 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், திருவள்ளூரில் காய்கறி விற்பனைசெய்யும் பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து சுகாதாரத் துறையினர் தீநுண்மி பாதிப்புக்குள்ளான பெண்ணை, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

திருவள்ளூரில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்!

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் காய்கறிகளை வாங்கிவந்து, திருவள்ளூரில் விற்பனை செய்துவந்த பெண்ணிற்கு, கரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தில் சுகாதாரத் துறையினர் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர். அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து தீநுண்மி பாதிப்புக்குள்ளான அப்பெண்ணை, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக திருவள்ளூர் பெரிய எடப்பாளையம் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் பார்க்க: மருத்துவர்கள், செவிலியருக்கு முழு பாதுகாப்பு உள்ளதா? - அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.