ETV Bharat / state

அரசுப் பள்ளி மாணவர்களிடையே மோதல்: பொதுமக்கள் வேதனை!

திருவள்ளூர்: திருத்தணியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு இடையேயான மோதலை கண்டுகொள்ளாத ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

fight
author img

By

Published : Aug 5, 2019, 5:32 AM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் திருத்தணி, முருகூர், இஸ்லாம் நகர், ஜோதி நகர், காசிநாதபுரம், தெக்கலூர், அகூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.

இதனைக் கண்ட சக மாணவர்கள், அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். ஆனால் மாணவர்களுக்கிடையே நடக்கும் சண்டையை அங்கிருந்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் வேடிக்கை பார்த்தபடி கண்டுகொள்ளாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மாணவர்களிடையே மோதல்

இதனையடுத்து, மாணவர்களுக்கு இடையேயான பிரச்னையை சரி செய்ய முற்படாமல், மெத்தனமாக இருந்த இப்பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாவட்டக் கல்வி அலுவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பள்ளி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Intro:திருத்தணியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு இடையே மோதல்.கண்டுகொள்ளாத கல்வித்துறை அதிகாரிகள். வடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் திருத்தணி, முருகூர், இஸ்லாம் நகர், ஜோதி நகர், காசி நாதபுரம், தெக்கலூர்,அகூர் என 10க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஆயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டு வருகிறது. இது தொடர்கதையாக மாணவர்கள் மோதல் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதனை பள்ளி நிர்வாகத்தினர் கண்டு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். நேற்றும் 11 வது வகுப்பில் பயிலும் மாணவர்கள் இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. அப்பொழுது இருதரப்பினரும் கொடூரமாக ஒருவரை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலை கண்ட சக மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். ஆனால் இந்த சந்தையை அங்கிருந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கண்டும் காணாமல் உள்ளனர். இதே நிலைமை நீடித்தால் இப் பள்ளி மாணவர்களுக்கு இடையே மோதல் மேலும் மேலும் தொடரும் அபாயம் உள்ளது.எனவே மாவட்ட கல்வி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பள்ளி மாணவர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தி தீர்வு கண்டால் தான் இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று அப்பகுதி பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்பது பொது மக்களுக்கு இடையே கேள்விக்குறியாக உள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.