திருவள்ளூர்: பழவேற்காடு ஏரிபகுதியில் கரிமணல் அருகே பக்கிங்காம் கால்வாய் அமைந்துள்ளது. இதில், நேற்று (ஜூன் 24) சுமார் 55 வயதுடைய அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கை, கால்களை கட்டப்பட்ட நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பாலைவனம் காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் யார்?
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சடலமாக மீட்கப்பட்டவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததால் இது கொலையாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: ஆட்டோவிலிருந்த மூதாட்டி வெட்டி படுகொலை!