சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கரோனா தொற்று பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து 12 நாள்கள் முழு ஊரடங்கை தமிழ்நாடு அரசு அறிவித்தது. இருப்பினும் அந்த 12 நாள்கள் சில தளர்வுகள் இருந்தன. ஆனால், ஞாயிற்றுக்கிழமை மட்டும் எவ்வித தளர்வும் இன்றி முழுமையான முடக்கம் இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
அதனடிப்படையில், திருவள்ளூர் நகர மக்கள் இந்த பொது முடக்கத்துக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அத்தியாவசிய தேவையான பால் தவிர பிற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, திருவள்ளூர் முக்கிய சாலை சந்திப்புகளில் காவல் துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
காலை 6 மணி முதல் 3 மணி வரை விதிமுறையை மீறி சாலையில் சுற்றிய 60 வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும், தொடர்ந்து கண்காணிப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தொடர்கதையாகும் கரடி நடமாட்டம்: அச்சத்தில் பொதுமக்கள்