திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் அறுவடைக்குத் தயராக இருந்த சுமார் 16ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நிவர், புரெவி புயலால் பாதிப்படைந்தன. அந்த பயிர்களை உரிய முறையில் கள ஆய்வு மேற்கொண்டு ஏக்கருக்கு 40ஆயிரம் ரூபாய் இழப்பீடு, பயிர் காப்பீடு வழங்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர், வேளாண் துறை அலுவலர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இதையேற்று, பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்கப்படும் என அரசு அலுவலர்கள் ஓரிரு தினங்களுக்கு முன்பு உறுதியளித்தனர். இந்தச் சூழ்நிலையில், அலுவலர்கள் வாக்குறுதியின்படி இழப்பீடு வழங்கினால் மட்டுமே தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும் எனவும், தங்கள் மீது மாவட்ட நிர்வாகம் அக்கறையுடன் செயல்படவேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: புயலால் சேதமடைந்த தரைப்பாலம்: சீரமைத்துத் தரக்கோரி வேண்டுகோள்