கரோனா வைரஸ் சீனா மட்டுமல்லாது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் கரோனா வைரஸ் மக்களை தாக்காத வகையில் எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத் துறையினருடன் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காய்ச்சல், சளி, இருமல் மூச்சுத்திணறல் அதிகம் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை மக்கள் அணுக வேண்டும்" என்றார்.
மேலும், கை கழுவும் பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், அவசர உதவிக்கு 104, 044 - 27664177 மற்றும் அவரது வாட்ஸ் ஆப் எண் 94443 - 97862 ஆகிய எண்களை அறிவித்தார்.
இதையும் படிங்க: 'அனைத்து குக்கிராமங்களுக்கும் நேரில் செல்வேன்' - அசத்தும் ஆட்சியர்!