திருவள்ளூர்: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பாலங்களை மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பட்டரைபெருமந்தூர் பகுதியில் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே பழமையான பாலம் இடிந்து விழும் நிலையிலுள்ளது. இதனால் அவ்வப்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இச்சூழலில், 2011 ஆண்டில் பட்டரைபெருமந்தூர், நாராயணபுரம் ஆகிய பகுதிகளில் ரூ.17.69 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இதுவரையில் பாலங்கள் கட்டி முடிக்கப்படாத நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பதவியேற்றுள்ள பொன்னையா இரு பாலங்களையும் ஆய்வு செய்தார்.
அப்போது, பணிகளை துரிதப்படுத்த அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதிக்குள் மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ஆட்சியர் தெரிவித்தார்.