திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தன்ராஜ் (22) என்பவருக்கும், ராமநாதபுரம் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த துர்கா (20) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கருத்து வேறுபாட்டால் துர்கா ராமநாதபுரத்தில் உள்ள, இலங்கை அகதிகள் முகாமில் ஓராண்டு காலமாகப் பிரிந்து வாழ்ந்துவருகின்றார். கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவரும் தன்ராஜ், நேற்று முன்தினம் (பிப். 26) அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் வரம்புமீறியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அச்சிறுமி, கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், தன்ராஜை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்த காவல் துறையினர் கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் முன்னிறுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ராஜேஸ் தாஸை பணியிடை நீக்கம் செய்ய மாதர் சங்கம் கோரிக்கை