ETV Bharat / state

திருவள்ளூர் அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா தீவிர பரப்புரை! - THIRUVALLUR ADMK CANDIDATE PV RAMANA ELECTION CAMPAIGN

திருவள்ளூர்: அதிமுக வேட்பாளர் பி.வி. ரமணா பாண்டூர், திருப்பாச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

THIRUVALLUR ADMK CANDIDATE PV RAMANA, திருவள்ளூர் அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா, பி.வி.ரமணா, PV RAMANA
THIRUVALLUR ADMK CANDIDATE PV RAMANA
author img

By

Published : Apr 1, 2021, 3:36 PM IST

Updated : Apr 1, 2021, 4:46 PM IST

திருவள்ளூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா இன்று (ஏப். 1) பூண்டி ஒன்றியத்திற்குள்பட்ட திருப்பாச்சூர், சிறுவானூர், கைவண்டூர், பாண்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்குச் சேகரிக்க சென்ற அனைத்துத் தெருக்களிலும், அனைத்து கிராமங்களிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். நடைபயணமாகச் சென்றும், திறந்த வேனில் சென்றும் பரப்புரை மேற்கொண்டார்.

பி.வி.ரமணா தீவிர வாக்குச் சேகரிப்பு

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த குடும்பத் தலைவிக்கு மாதம் 1500 ரூபாய் ஊதியம், வருடத்திற்கு 6 எரிவாயு சிலிண்டர் இலவசம், குடும்ப அட்டைக்கு வாஷிங் மெஷின் போன்ற அனைத்துத் திட்டங்களையும் எடுத்துச் சொல்லி இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.

பாமக, பாஜக, புரட்சி பாரதம் என கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் வேட்பாளர் பி.வி.ரமணாவுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்.

இதையும் படிங்க: 'ஸ்டாலினும், ராகுலும் மோடியை எதிர்க்கும் இரு துப்பாக்கிகள்!'

Last Updated : Apr 1, 2021, 4:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.