திருவள்ளூர் மாவட்டத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 34 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 129ஆக உயர்ந்துள்ளது.
புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில், 15 பேர் பூந்தமல்லியைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதேபோன்று, திருமழிசையில் 6, ஆவடி 5, வில்லிவாக்கம் 3, திருவேற்காடு, கடம்பூர் மற்றும் மீஞ்சூரில் தலா ஒருவருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 49 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 80 பேர் இப்போது சென்னை ஸ்டான்லி, ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இதையும் படிங்க : நெருக்கடியான நேரத்தில் விலையேற்ற நடவடிக்கை கொடூரமானது - சிதம்பரம்