ETV Bharat / state

வழிப்பறி கொள்ளையர்களை துரத்தி சென்று தர்ம அடி! - செயின் பறிப்பு

திருவள்ளூர்: மாங்காடு அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

arrest
arrest
author img

By

Published : Dec 15, 2020, 4:27 PM IST

மாங்காடு அருகே பரணிபுத்தூரில் வனஜா என்ற பெண் சாலையில் நின்று கொண்டுடிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், வனஜா கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க சக்கிலியை அறுத்து எடுத்துச் சென்றனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் இருசக்கர வாகனத்தை தொடர்ந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு துரத்திச் சென்று அவர்களை பிடித்தனர்.

பின்னர் அவர்களிடமிருந்து தங்க சங்கலியை மீட்டதோடு, இருவருக்கும் தர்ம அடி கொடுத்து மாங்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது செம்மஞ்சேரியை சேர்ந்த சசி (22), காந்தி நகரை சேர்ந்த இளையராஜா (19) என்பது தெரிய வந்தது. இதேபோல் இருவரும் வேறு ஏதேனும் வழிப்பறி, கொள்ளை போன்றவைகளில் ஈடுபட்டுள்ளனரா எனக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவனுக்கு சாகும்வரை தூக்கு - தேனி நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.