திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி முனுசாமி நகரில் நேற்று (மார்ச் 26) நள்ளிரவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்குள்ள டாஸ்மாக் கடையின் வெளியே மதுபாட்டில்கள் சிதறிக் கிடந்தன. சந்தேகமடைந்த காவல்துறையினர், டாஸ்மாக் ஊழியர்களை வரவழைத்து கடையை திறந்து பார்த்ததில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடப்பட்டது தெரியவந்தது.
மேலும், கண்காணிப்பு கேமராக்களை திசைத்திருப்பி திருடியது கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 144 தடையை மீறி விற்பனைசெய்த மதுபாட்டில்கள் பறிமுதல்