திருவள்ளூர் அடுத்த கீழ்நல்லாத்தூரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 37) இவர் வீட்டில் கடந்த 17ஆம் தேதி 3 லட்சம் ரூபாய் திருடு போனதாக மணவாளநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அவர் வீட்டில் கொள்ளையடிக்க முயற்சி மேற்கொண்ட திருடர்கள் வீட்டின் உரிமையாளர்கள் வந்ததால் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்ற நிலையில் சிசிடிவி காட்சிகள் மூலம் கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் காசிமேட்டை சேர்ந்த கிறிஸ்டோபர் (27) திருநின்றவூரை சேர்ந்த பார்த்திபன் வயது (40) இரு கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் தாங்கள் திருடவில்லை என்றும், வீட்டில் உரிமையாளர்கள் வந்ததால் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றதாக தெரிவித்தனர்.
அதன் பின்னர் வீட்டின் உரிமையாளரை வர வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தங்கள் வீட்டில் பணம் திருடு போகவில்லை என தெரிவித்தனர். இதனையடுத்து பொய் புகார் அளித்த வீட்டின் உரிமையாளர் ராஜேஷை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
இதைத்தொடர்ந்து கொள்ளையடிக்க முயற்சி மேற்கொண்ட இரு கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்திஆஜர்படுத்தி திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிக்க: காதல் மனைவியிடம் கருத்து வேறுபாடு - பூச்சிமருந்து அருந்திய கணவர்