திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதி ஆனந்தூர் மீன்பிடி பகுதி ஆகும். இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் படகுகள் மூலம் முகத்துவாரத்தில் துவாரத்தின் வழியாகக் கடலுக்குள் சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் பழவேற்காடு முகத்துவாரத்தை மட்டுமே பயன்படுத்திவரும் நிலையில், முகத்துவாரம் பருவ மழை தவழும் காலங்களில் அணைந்துவிடுவதும், மீனவர்களால் தோண்டப்பட்டு மழை காலங்களில் திறந்துவிடுவதும் வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டிய பொதுமக்கள் செய்த போராட்டத்தால் தற்போது தற்காலிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இயந்திரம் மூலம் முகத்துவாரம் தூர்வாரும் பணிகள் கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி தொடங்கப்பட்டது.
50 அடி அகலம் 10 அடி ஆழம் கொண்ட தூர்வாரும் பணியில் மூன்று மாதம் நடைபெற்று வந்த நிலையில் இந்த பணிகள் தற்போது நிறைவுற்று, மீனவ கிராம பொதுமக்கள் தலைமையில் மீன்பிடி துறைமுக அலுவலர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றால் தூண்டில் வளைவு திட்டத்தின் மூலம் நிரந்தரமாக முகத்துவாரம் தூர்வார வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்து: வீட்டிலிருந்த பொருட்கள் எரிந்து நாசம்!