திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் உள்ள 150 படுக்கைகள் நிரம்பியுள்ளன. இம்மருத்துவமனைக்கு தினந்தோறும் 150க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் வருவதால், போதிய படுக்கை வசதி இல்லை என்று கூறப்பட்ட நிலையில், நேற்று (ஏப்.24) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்ததால், இடப்பற்றாக்குறை ஏற்பட்டு நோயாளிகளை தரையில் படுக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.
போதிய வசதி இல்லாததால் மாற்று இடத்தில் படுக்கை வசதி செய்வதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இந்த மருத்துவமனையில் இரண்டு மருத்துவர்கள், நான்கு செவிலியர்கள் உள்பட ஆறு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு கரோனா பரிசோதனை செய்ய அதிகளவில், பொது மக்கள் வருகை அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் இந்த மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் அதிகமாக உயிரிழந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி - பிரதமர் மோடி உறுதி