ETV Bharat / state

தமிழ்நாட்டில் அதிமுக கொள்ளைக் கும்பலை விரட்டும் காலம் நெருங்கிவிட்டது - டி.ஆர்.பாலு பேச்சு

author img

By

Published : Dec 23, 2020, 9:15 PM IST

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் அதிமுக கொள்ளைக் கும்பலை விரட்டும் காலம் நெருங்கிவிட்டது என ஆவடியில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பேசியுள்ளார்.

அதிமுகவை நிராகரிப்போம்
அதிமுகவை நிராகரிப்போம்

ஆவடியை அடுத்த நடுகுத்தகை ஊராட்சி திமுக சார்பில் "அதிமுகவை நிராகரிப்போம்" என்ற கிராம சபைக் கூட்டம் இன்று(டிச.23) காலை நடைபெற்றது.

இதற்கு, திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில், கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, தொடங்கி வைத்து பேசினார். அதில், 'திமுக ஆட்சியில் பெண்களுக்கு சொத்துரிமை, மகளிர் சுய உதவிக்குழு அமைத்தல், உள்ளாட்சிகளில் 33 விழுக்காடு இட ஒதுக்கீடு, அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கிராமங்கள் தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் என கணக்கிலடங்காத பல மக்கள் நலத்திட்டங்களை கருணாநிதி செயல்படுத்தினார்.

ஆனால், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் காமராஜ், வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் பல கோடி ரூபாய் ஊழல்கள் செய்துள்ளனர்.

இது குறித்த பட்டியலை தலைவர் ஸ்டாலின் நேற்றைய தினம் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து 96 பக்கங்கள் கொண்ட ஊழல் பட்டியலை ஆதாரப்பூர்வமாக கொடுத்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் அதிமுக கொள்ளைக் கும்பலை விரட்டும் காலம் நெருங்கிவிட்டது.

வரும் தேர்தலில் நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு அளிக்க வேண்டும். இன்னும் 120 நாள்களில் தமிழ்நாட்டில், மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி மலர்வது நிச்சயம்' என்றார்.

இறுதியில், 'அதிமுகவை நிராகரிப்போம்' என்ற உறுதிமொழி பொதுமக்கள் மத்தியில் ஏற்கப்பட்டது.

இதையும் படிங்க: 'தபாலில் வாக்களிப்பு எனும் அறிவிப்பே பிராடுத்தனமானது' - துரைமுருகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.