திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி பகுதியைச்சேர்ந்த சூரியநாராயணன் - புஷ்பலதா தம்பதியர் மகள் சந்தியா, 25. யோகா ஆசிரியையான இவர், அதே பகுதியில், ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை நடத்தி வருகிறார்.
இவரும், இவரது 20க்கும் மேற்பட்ட மாணவர்களும் யோகாவில் பல உலக சாதனைகள் படைத்துள்ளனர். இந்த நிலையில், யோகா ஆசிரியை சந்தியா மீண்டும் ஒரு உலக சாதனைப்படைத்துள்ளார்.
இவர் கடினமான விருச்சிகாசனத்தில் நின்றபடி, இரண்டு வரிசை மற்றும் மூன்று வரிசை கியூப்களை, 26 விநாடிகளில் சேர்த்து புதிய உலக சாதனைப் படைத்தார். இவரது சாதனை, ‛இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்’, ‛ வேர்ல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்’, ‛அசிஸ்ட் உலக சாதனை’, ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது. சாதனைப் படைத்த யோகா ஆசிரியை சந்தியாவை, கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க:உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்... வெண்கலப்பதக்கம் வென்ற சாத்விக், சிராக் இணை...